செவ்வாயிலும் நில நடுக்கம்

செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை நாசாவின் இன்சைட் (Insight) ஆய்வுகலன் முதன்முறையாக கண்டுபிடித்துள்ளது.

பூமியில் ஏற்படும் மாறுதல்களால் தான் நில நடுக்கம் ஏற்படுகின்றது என்றும் கணிப்புகள் கூறி வந்தனர். இந்நிலையில் தற்போது, பூமியைத் தவிர மற்ற கிரகங்களிலும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று நிரூபணம் ஆகியுள்ளது.

நிலநடுக்கம், நில அதிர்வு, பூகம்பம் உள்ளிட்ட பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இதனால் சுனாமி மற்றும் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படுகின்றது. நில நடுக்கத்தை ரிக்டர் அளவு கோளில் கணிக்கப்படுகின்றது.

இதுவரை பூமியை தவிர மற்ற கிரகங்களிலும் நில நடுக்கம் ஏற்படுமா என்று நாம் நினைத்து பார்த்ததும் கூட கிடையாது. அறிவியலுக்கும் இது புலப்படாத விஷயமாக இருந்தது. மனித இனம் செய்யும் தவறுகளால் தான் பூமியில் நில நடுக்கம் ஏற்படுகின்றது எனவும் கணித்தும் வந்தோம்.

செவ்வாய் கிரகத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை நாசாவின் இன்சைட் (Insight) ஆய்வு கலன் முதல்முறையாக கண்டுபிடித்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை ஆய்வு செய்ய கடந்த 6 மாதங்களுக்கு முன் இன்சைட் விண்கலன் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், தற்போது செவ்வாயின் நிலப்பரப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், செவ்வாய்கிரகத்தில் ஏற்பட்ட நிலஅதிர்வு இன்சைட் விண்கலன் ஆய்வு செய்து முதல் அதிர்வை பதிவு செய்துள்ளதாகவும் கலிபோர்னியா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கத்துக்கு இணையாக 2.5 அதிர்வு பதிவானதாகவும், அந்த அதிர்வு செவ்வாய்கிரகத்துக்குள்ளிருந்து உருவானதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்குமுன் மார்ச் 14, ஏப்ரல் 10 மற்றும் 11 தேதிகளில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டாலும், நேரம் மற்றும் அதிர்வின் அளவை கொண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி பதிவானது நிலநடுக்கம் என விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!