செவ்வாயில் பறக்கப் போகும் தேனி ரோபோக்கள்

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது.

அமெரிக்காவை தலைமை இடமாக கொண்டு செயல்படும் நாசா நிறுவனத்தில் விஞ்ஞானிகள், ரோவர்ஸ்க்கு பதிலாக ஒரு ரோபோ தேனீ வடிவமைத்து வருகின்றனர். சோதனைகள் முடிந்து இதனை செவ்வாய்கிரகத்திற்கு அனுப்பவும் திட்டமிட்டுள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள தேனீக்கள் வடிவத்திலான சிறிய வகை ரோபோக்களை அனுப்ப நாசா முடிவு செய்துள்ளது. ஏற்கெனவே நாசா அனுப்பிய கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் வெற்றிகரமாக பயணித்து வருகிறது. இது செவ்வாய் கிரகம் தொடர்பான தகவல்களையும், புகைப்படங்களையும் அனுப்பிவருகிறது. கூடுதலாக தகவல்களை பெற தேனீக்கள் வடிவில் ரோபோக்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. இந்த தேனீ ரோபோக்களை உருவாக்க ஜப்பானை சேர்ந்த நிறுவனம், 1,25,000 அமெரிக்க டாலர்கள் நிதி வழங்கியுள்ளது. கடுமையான மழை, குளிர் போன்ற காலநிலைகளின் போது எளிதாக பறக்கும் திறனுடன் பெரிய இறக்கைகளுடன் தேனீ ரோபோக்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தேனீக்களில் பொருத்தப்பட்ட சென்சார் மூலம், செவ்வாய் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டு நாசவிற்கு அனுப்பப்படும்.

Sharing is caring!