செவ்வாய் கிரகத்தில் புதிய சரித்திரம் படைத்தது கியூரியோசிட்டி ரோவர்

செவ்வாய் கிரகத்தினை ஆராய்வதற்கென நாசா விண்வெளி ஆய்வு மையத்தினால் கியூரியோசிட்டி ரோவர் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

கடந்த சில வருடங்களாக அங்குள்ள காலநிலை மற்றும் மேற்பரப்புக்கள் என்பன தொடர்பான தகவல்களையும், புகைப்படங்களையும் பூமிக்கு அனுப்பிவருகின்றது.

இவற்றினை அடிப்படையாகக் கொண்டேவிஞ்ஞானிகள் செவ்வாய் கிரகம் தொடர்பான ஆய்வுகளை தொடர்ந்துவருகின்றனர்.

இந்நிலையில் தற்போது 1.8 பில்லியன் பிக்சல்கள் உடைய பனோரமா தொழில்நுட்பத்தின் ஊடாக செவ்வாய் கிரகத்தினை பதிவு செய்து பூமிக்கு அனுப்பியுள்ளது.

இதுவே ரோவர் விண்கலம் அனுப்பி அதிகூடிய பிரிதிறன் கொண்ட புகைப்படமாக இருக்கின்றது.

இதற்கு முன்னர் 650 மில்லியன் பிக்சல்களை கொண்ட புகைப்படமே உயர் பிரிதிறன் உடையதாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!