செவ்வாய் கிரகம் தொடர்பில் விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்..!!

நாசா விண்வெளி ஆய்வு மையமானது தொடர்ச்சியாக செவ்வாய் கிரகம் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டுவருகின்றது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தரையிறக்கப்பட்ட இன்சைட் ரோவர் ஆனது செவ்வாய் கிரகத்தின் சூழல் அமைப்பு தொடர்பாக ஆய்வு செய்துவருகின்றது.

இந்நிலையில் அக் கிரகத்தில் நாசா விஞ்ஞானிகள் எதிர்பார்த்ததை விடவும் காந்தப் புலமானது 10 மடங்கு அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய தகவலானது செவ்வாய் கிரகம் தொடர்பில் புதிய கோணத்தில் ஆய்வுகளை மேற்கொள்ள பெரிதும் உதவியாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நாசா விண்வெளி ஆய்வு மையம் Mars 2020 ரோவரை இவ்வருடம் அனுப்பவுள்ளதுடன், ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமானது Rosalind Franklin ரோவரையும், சீனா Huoxing-1 (HX-1) எனும் விண்கலத்தினையும் இந்த கோடை காலத்தில் விண்ணில் அனுப்பவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!