ஜிமெயில் சேவையைப் பயன்படுத்துவது எப்படி?

இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில் மின்னஞ்சல் சேவையானது இன்றியமையாததாகக் காணப்படுகின்றது.

இவ்வாறான மின்னஞ்சல் சேவை வழங்குனர்களில் கூகுளின் ஜிமெயில் சேவையானது முன்னணியில் காணப்படுகின்றது.

இச் சேவையினைப் பயன்படுத்துவதற்கு பொதுவாக இணைய இணைப்பு அவசியமாகும்.

எனினும் இணைய இணைப்பு அற்ற நிலையிலும் வரையறுக்கப்பட்ட ஜிமெயில் சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

அதாவது பெறப்பட்ட மின்னஞ்சல்களை படித்தல், மின்னஞ்சல்களை தேடுதல் மற்றும் அவற்றிற்கு பதிலளித்தல் போன்றவற்றினை மேற்கொள்ள முடியும்.

இதனை செயற்படுத்துவதற்கு ஜிமெயில் செட்டிங் பகுதிக்கு செல்ல வேண்டும்.

அங்கு Enable offline mail என்பதற்கு சரி அடையாளம் இட வேண்டும்.

அதன் பின்னர் எத்தனை நாட்களுக்கு ஒருதடவை மின்னஞ்சல்கள் ஒத்திசைவு செய்யப்பட வேண்டும் என்பதை வழங்க வேண்டும்.

தொடர்ந்து Save changes என்பதை கிளிக் செய்து அனைத்து மாற்றங்களையும் சேமிக்க வேண்டும்.

Sharing is caring!