ஜும்… ஜும்… கேமரா…! அசத்தல் தரத்தில் கொடுக்கிறது ஓப்போ நிறுவனம்!!!

மும்பை:
ஸ்மார்ட்போன் வாங்கும் இளைய தலைமுறைகள் முக்கியமாக கேமராவின் தரத்தை தான் பார்க்கின்றனர். இவர்களுக்காகவே வந்துள்ளது ஸ்பெசல் வசதி. எதில் தெரியுங்களா?

இப்பொழுது ஸ்மார்ட்போன்கள் வாங்கும் பலர் கேமராவின் தரத்தை முக்கியமான ஒன்றாகக் கருதுகிறார்கள். ஸ்மார்ட்போன்களில் இருக்கும் கேமராக்களில் பெரும்பாலும் டிஜிட்டல் ஜூம் வசதியே இருக்கும். இதில் இருக்கும் பிரச்னை என்னவென்றால் zoom செய்து போட்டோ எடுக்கும்போது அதன் தரம் மிகக் குறைவாகவே இருக்கும் என்பதுதான்.

அதே நேரத்தில் அதிக ஆப்டிகல் zoom திறன் கொண்ட கேமராவில் எடுக்கும் புகைப்படங்கள் தெளிவாக இருக்கும். ஆனால், அந்த வகை கேமராவை அமைக்க இடம் சற்று அதிகமாகத் தேவைப்படும். எனவே, ஸ்மார்ட்போன்களில் அதிக திறன் கொண்ட கேமராவைக் கொடுப்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே இருந்து வந்தது.

இந்த நிலையில், ஓப்போ நிறுவனம் அதன் ஸ்மார்ட்போனில் 10x ஆப்டிகல் zoom திறன் கொண்ட கேமராவை அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த வசதியைக் கொண்ட ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தலாம் எனத் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில் அதை ஓப்போ நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

அடுத்த மாதம் MWC 2019 நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது ஒப்போ. இந்த நிறுவனம் ஏற்கெனவே 5X ஆப்டிகல் zoom கொண்ட ஸ்மார்ட்போன் கேமராவை இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே அறிமுகப்படுத்தியிருந்தது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!