ஜெட் இயந்திர உடையை உருவாக்கி பிரித்தானிய மாணவன் சாதனை!

உடலில் அணிந்து கொண்டு வேகமாக பறக்கும் ஜெட் இயந்திர உடையை உருவாக்கி பிரித்தானிய மாணவன் சாதனை படைத்துள்ளான்.

பிரித்தானியாவைச் சேர்ந்த லாக்பாரக் பல்கலையை சேர்ந்தவர் சாம் ரோஜர்ஸ் 23. இவர் உலகின் வேகமாக பறக்கக்கூடிய ‘ஜெட் பேக்’ ஐ உருவாக்கியுள்ளனர்.

‘ஜெட் பேக்’ என்ற பறக்கும் ‘5 டர்போ ஜெட்’ இயந்திரத்தினை உடலில் உடை போல அணிந்து கொள்ள வேண்டும். இந்த இயந்திரம் அலுமினியம், இரும்பு மற்றும் நைலானால் தயாரிக்கப்பட்டுள்ளது.

‘3டி பிரின்டரை’ பயன்படுத்தி இதனை உருவாக்கியுள்ளான் குறித்த மாணவன். உடையில் கை மற்றும் முதுகுப்பகுதியில் இயந்திரம் பொருத்தப்பட்டிருக்கும்.

ஒவ்வொரு இயந்திரத்தினதும் எடை 22 கிலோ கிராம் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்மூலம் 10 ஆயிரம் அடி உயரம் வரை பறக்க முடியும் என்பதுடன் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பயணிக்க முடியும்.

அமெரிக்காவை சேர்ந்த ஜூக் ஹூல் என்ற இயற்பியல் அறிஞர் 1980ஆம் ஆண்டு முதன்முதலாக, ‘3டி பிரின்டர்’ தொழில்நுட்பத்தை கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!