ஜெட் பியூஷன்… 3டி பிரிண்டர் அறிமுகம்..!

மும்பை:
ஜெட் பியூஷன் என்ற பெயரில் 3டி பிரிண்டர் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ஹூயூலெட் பக்கார்டு இன்கார்ப்பரேஷன் நிறுவனம் முப்பரிமாண (3டி) பிரிண்டரை அறிமுகம் செய்துள்ளது. ஜெட் பியூஷன் என்ற பெயரில் இத்துறையினருக்கு உதவும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது.

பொறியியல் துறையினர் உருவாக்கும் பொருள்களை உருவாக்கவும், தயாரிக்கவும் இந்த பிரிண்டர் மிகவும் உபயோகமாக இருக்கும். சிறிய நிறுவனங்கள் முதல் நடுத்தர ரக நிறுவனங்களுக்கு மிகவும் உபயோகமானது.

இதில் மல்டி ஜெட் பியூஷன் தொழில்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளது. இதன் விலை ரூ. 1.5 கோடியாகும் (வரிகள் தவிர்த்து). இருப்பினும் இதற்கு மூன்று ஆண்டு உத்தரவாதத்தை இந்நிறுவனம் அளித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!