டார்க் மோடில் கூகுள் தேடு பொறி!!

டார்க் மோட் தேடு பொருள் பயன்பாட்டு சோதனையில் கூகுள் களமிறங்கியுள்ளது.கூகுள் தேடு பொறியை டார்க் மோடில் பயன்படுத்துவதற்கு ஏற்ப மாற்றம் செய்வதற்கான முயற்சியில் கூகுள் நிறுவனம் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே யுடியூப், வாட்ஸ்அப் உள்ளிட்ட பிரபல செயலிகள், டார்க் மோட்டில் பயன்படுத்த கிடைக்கும் நிலையில், கூகுள் தேடு பொறி மட்டும் மாற்றப்படாமல் இருந்து வருகிறது.

இந்த நிலையில் டார்க் மோட் பயன்படுத்துவதன் மூலமாக கண் அழுத்தம் குறைவதுடன், எரிசக்தி மிச்சமாகும் என கருதப்படுவதால் தேடுபொறியை டார்க் மோடில் பயன்படுத்துவதற்கான சோதனையை கூகுள் நிறுவனம் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் இதுகுறித்து கூகுள் அறிவிப்பு வெளியிடும் என இணைய பயன்பாட்டாளர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Sharing is caring!