டுவிட்டரில் விரைவில் புத்தம் புதிய வசதி

முன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றாக விளங்கும் டுவிட்டரில் புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.

அதாவது தனது பயனர்களுக்கு குரல்வழி முறையிலான தகவல்களை பரிமாறுவதற்கு வசதி வழங்கவுள்ளது.

அதுவும் நேரடி குறுஞ்செய்தியாக இவ்வாறு குரல்வழி தகவல்களை பரிமாறிக்கொள்ள முடியும்.

இந்த தகவலை டுவிட்டர் நிறுவனத்தில் பணியாற்றும் Alex Ackerman-Greenberg என்பவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

இவ் வசதியானது தற்போது பரிசீலிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இப் பரிசீலிப்பானது தற்போது பிரேஸில் நாட்டில் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டுவருகின்றது.

அங்கு அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் ஏனைய நாடுகளிலும் டுவிட்டர் பயனர்கள் இவ் வசதியினைப் பெற முடியும்.

Sharing is caring!