ட்ரூகாலர் அப்ளிகேஷனில் தகவல் திருடப்படுகிறதா?..

தற்சமயம் புதிய தகவல் வெளிவந்துள்ளது, அது என்னவென்றால் ட்ரூகாலர் ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் பயன்பாட்டாளர்களின் தகவல் விற்பனை செய்யப்பட்டுள்ளது என செய்தி வந்த வண்ணம் உள்ளது.

இந்திய ஸ்மார்ட்போன் பயன்பாட்டளர்களில் 60சதவிகதிம் முதல் 70சதவிகிதம் வரையிலான மக்கள் ட்ரூகாலர் அப்ளிகேஷனை பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில் உங்களுக்கு போன்ற செய்யும் நபர் யார், என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் இந்த அப்ளிகேஷன் கொண்டுவரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ட்ரூகாலர் நிறுவனம்

பின்பு மக்கள் இதற்கு அளித்த ஆதரவை கண்ட ட்ரூகாலர் நிறுவனம், மேலும் சில அப்டேட்களை செய்தது, அதன்படி பணப்பரிவர்த்தனை செய்யும் வசதியையும் ட்ரூகாலர் அறிமுகப்படுத்தியது.

பல லட்சம் பேர் பணப்பரிவர்தனை செய்து வருகின்றனர்

இந்த அப்ளிகேஷன் மூலம் பல லட்சம் பேர் பணப்பரிவர்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் பெயர் அறிய முடியாத சில சைபர் செக்யுரிட்டி கண்காணிப்பாளர்கள் ட்ரூகாலர் நடைபெறும் பணப் பரிவர்த்தனைகளை கவனித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விற்பனை

மேலும் அதிக அளவில் பணப்பரிவர்ததனை செய்யும் நபர்களின் தொலைபேசி எண், இ-மெயில் ஐடி மற்றும் தனிப்பட்ட தகவல்களை சமூக வலைத்தள மோசடி கும்பல்களிடமும் இணையதள பிரோக்கர்களிடமும் விற்பனை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தத் தகவல்கள் ரூ.1.5 லட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ட்ரூகாலர் நிறுவனம் மறுத்துள்ளது

ஆனால் இந்த தகவல்களை ட்ரூகாலர் நிறுவனம் மறுத்துள்ளது, தங்கள் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் எதவும் ஹேக்கர்களார் திருடப்படவில்லை என்றும் அவை யாருக்கு விற்பனை செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது. பின்பு பணப்பரிவர்தனை செய்யும் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக உறுதி கூறியுள்ளது.

Sharing is caring!