தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டுவந்தது வாட்ஸ் ஆப்

தற்போது பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்பட்டுவரும் பிரபல குறுஞ்செய்தி அப்பிளிக்கேஷன் ஆக வாட்ஸ் ஆப் காணப்படுகின்றது.

உலகளவில் பல மில்லியன் வரையானவர்கள் இந்த அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இப்படியிருக்கையில் அண்மையில் வாட்ஸ் ஆப்பின் விதிமுறை மற்றும் நிபந்தனைகளில் மாற்றங்களை கொண்டுவரவுள்ளதாக அறிவித்திருந்தது.

அதுமாத்திரமன்றி இப் புதிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டால் மாத்திரமே வாட்ஸ் ஆப்பினை தொடர்ந்து பயன்படுத்த முடியும் எனவும், அவ்வாறில்லாவிடில் வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்த முடியாது எனவும் தெரிவித்திருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த பயனர்கள் பலர் வாட்ஸ் ஆப்பினை பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளனர்.

இது பேஸ்புக் நிறுவனத்திற்கு பெரும் ஏமாற்றமாக மாறியுள்ளது.

இதனால் எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படவிருந்த விதிமுறை மற்றும் நிபந்தனை மாற்றத்தை சற்று பிற்போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Sharing is caring!