தனது பிரம்மாண்டமான மாநாட்டினை நிறுத்தியது பேஸ்புக்

பேஸ்புக் நிறுவனம் இவ் வருடம் நடாத்தவிருந்த F8 மாநாட்டினை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் அச்சம் காரணமாகவே இம் மாநாடு திடீரென நிறுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கிலும் சுமார் 60 நாடுகளில் பரவியுள்ள கொரோனா வைரஸ் காரணமாக இதுவரை 3,000 வரையானவர்கள் இறந்துள்ளதுடன், 90,000 வரையானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பல முன்னணி நிறுவனங்களும் தமது வியாபார ரீதியான செயற்பாடுகளை தற்காலிகமாக நிறுத்திவருகின்றன.

இதன் தொடர்ச்சியாகவே பேஸ்புக் நிறுவனமும் தனது F8 மாநாட்டினை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

இதேவேளை கடந்த மாதம் நடைபெறவிருந்த மொபைல் வேர்ள்ட் கொங்கிரஸ் நிகழ்வும் கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இறுதிக்கட்டத்தில் நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!