தனது வித்தியாசமான திறமையினால் உலகின் முன்னணி நிறுவனங்களை அசரவைத்த தமிழ் இளைஞன்!! குவியும் பாராட்டுக்கள்..!

இன்ஸ்டகிராம் செயலியில் இருந்த தொழில்நுட்ப பிழையை கண்டுபிடித்து சுட்டிக்காட்டிய தமிழர் ஒருவருக்கு சுமார் 20 லட்சம் ரூபா பணத்தை அந்நிறுவனம் வெகுமதியாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தொழில்நுட்ப பிழையை கண்டுபிடித்து, சுட்டிக்காட்டிய தமிழகத்தைச் சேர்ந்த கணினி பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சியாளரான லக்ஷ்மண் முத்தையா என்ற இளைஞனுக்கே அந்நிறுவனம் இந்த வெகுமதியை வழங்கியிருக்கின்றது.

இன்ஸ்டகிராம் செயலியின் கட்டுமானத்தில் தொழில்நுட்ப பிழை உள்ளதாகவும் அதன் மூலம் எந்தவொரு பயனரின் கணக்கையும் எளிதில் ஹேக் செய்ய முடியும் எனவும் கூறிவந்தார் லக்ஷ்மண் முத்தையா.இவ்விவகாரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற அவர், இன்ஸ்டகிராமில் மறந்துபோன பாஸ்வேர்டுகளை திரும்பப்பெறுவதற்காக பயனர்களின் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் கன்பர்மேசன் மெசேஜ் அமைப்பில் தொழில்நுட்ப பிழை இருப்பதாகவும், அதன் மூலம் பயனர்களின் கணக்குகளை ஹேக் செய்யமுடியும் எனவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதையடுத்து அந்த பிழையானது சரிசெய்யப்பட்டுள்ள நிலையில், தவறை சுட்டிகாட்டி உதவியதற்காக அந்நிறுவனம் லக்ஷ்மண் முத்தையாவிற்கு சுமார் 20 லட்ச ரூபாய் பணத்தை வெகுமதியாக வழங்கி கெளரவப்படுத்தியுள்ளது.ஃபேஸ்புக்கில் ஒருவர் பதிவிடும் புகைப்படங்களை அவருக்கு தெரியாமலேயே மற்றவர்கள் நீக்கிக்கொள்ளக்கூடிய பாதுகாப்பற்ற தன்மை இருப்பதைச் சுட்டிக்காட்டி ஏற்கெனவே இவர் பண வெகுமதியினைப் பெற்று அசத்தியது குறிப்பிடத்தக்கது.இவ்வாறு உலகின் முன்னணி நிறுவனங்களின் சமூக வலைத்தளங்களில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அசத்திவரும் லக்ஷ்மண் முத்தையாவுக்கு தமிழர்கள் தங்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Sharing is caring!