திறக்கப்பட்டது எகிப்து ரகசியம்!

எகிப்தின் இரண்டு தொன்மையான பிரமிடுகள், 1965 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக பார்வையாளர்களுக்கு மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளன.

தாஷூர் நெக்ரொபோலிஸ் (Dahshur necropolis) வட்டாரத்தில் அவை அமைந்துள்ளன.

அந்த வட்டாரம், தலைநகர் கைரோவில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.

மன்னர் சினிஃபெருவின் (Sneferu) கோணல் பிரமிடும், சிவப்புப் பிரமிடும் அந்த வட்டாரத்தில் தான் உள்ளன.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கல், களிமண், மரம் ஆகியவற்றால் செய்யப்பட்ட கல்லறைப் பெட்டிகளையும் கண்டுபிடித்துள்ளனர்.

அவற்றுள் சிலவற்றில், பதப்படுத்தப்பட்ட மம்மிகள் இருந்தன.அந்த இடத்தில், அடுத்த மாதம் மேலும் அகழாய்வு நடத்தப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

Sharing is caring!