தெரிஞ்சிடுச்சா… சிறப்பு அம்சங்கள் தெரிஞ்சிடுச்சா… ஹூன்டாய் க்யூஎக்ஸ் கார் சிறப்பு அம்சங்கள் லீக்

புதுடில்லி:
இதுதான்… இதுதான் சிறப்பு அம்சங்கள் என்று ஹூன்டாய் க்யூஎக்ஸ் கார் பற்றிய விஷயங்கள் லீக் ஆகி உள்ளது.

ஆட்டோமொபைல் துறையில் ஒவ்வொரு மாதமும் புத்தம் புதிய கார்கள் அறிமுகமாகி கொண்டே வருகின்றன. மற்ற நிறுவனங்களின் போட்டிகளை சமாளிக்க, புதுபுது தொழில்நுட்பங்களை, யுக்திகளை கையாண்டு வருகின்றனர்.

ஹூன்டாய் நிறுவனம் எஸ்யுவி கார்களில் புதிதாக க்யூஎக்ஸ்ஐ (QXi) என்ற மாடலை அறிமுகம் செய்ய இருக்கிறது. சந்தைக்கு வரும் முன்னரே இந்த காரின் அம்சங்கள் என்னென்ன என்பது வெளியாகி உள்ளன.

தற்போது வெளியாகி இருக்கும் புகைப்படங்களில் க்யூஎக்ஸ்ஐ மாடலின் உட்புறம் மற்றும் வெளிப்பு தோற்றம் வெளியாகி உள்ளது. சீட்டின் தலைபகுதியை அட்ஜெஸ்ட் செய்யும் முறை, இரு இருக்கைக்கான கை வைக்கும் பகுதி, வலை மாதிரியான பின்புற கண்ணாடி, 8 இன்ச் டச் ஸ்கிரீன் உடன் கூடிய தகவல்
அமைப்பு ஆகியவை உள்ளன.

மேலும் சன்ரூப், ஆட்டோ கிளைமேட் கன்ட்ரோல், வயர்லஸ் சார்ஜிங்,
பிரிக்கப்பட்ட முகப்பு விளக்குகள், ஸ்போர்ட் டைப்பிலான வெளிப்புறத்
தோற்றம் பல்வேறு பாதுகாப்பு தொடர்பான விஷயங்கள் இந்த காரில் இருப்பதாக தெரிகிறது.

பிஎஸ்6 நிபந்தனைகளை ஏற்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆட்டோ கியர் மற்றும் மேனுவல் என இரு வகையிலும் இயங்க கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிதாக வந்த சான்ட்ரோவில் பயன்படுத்தப்பட்ட ஏஎம்டி, இந்த காரிலும் செயல்படுத்தப்பட இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக இது எஸ்யுவி ரக கார்
என்றாலும், பார்க்கிங்கில் நிறுத்த பெரிய அளவிலான இடம் தேவைப்படாது என்கிறார்கள்.

தற்போது சந்தையில் பிரபலமாக இருக்கும் போர்ட் எக்கோ ஸ்போர்ட், மாருதி சுசுகியின் பிரஸ்ஸா, டாடா நெக்ஸான் மற்றும் வரவிருக்கும் மஹிந்திரா எக்ஸ்யுவி 300 ரக கார்களுக்கு பலத்த போட்டியாக, ஹூன்டாயின் க்யூஎக்ஸ்ஐ இருக்கும் என்கிறார்கள்.

தற்போது சில்வர் நிறத்தில் மட்டும் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கார்,
சந்தைக்கு வரும்போது கருப்பு, சிகப்பு உட்பட பல வண்ணங்களிலும் வெளியாகும் என தெரிகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!