தொலைக்காட்சி விற்பனையில் காலடி பதிக்கும் முன்னணி லேப்டொப் வடிவமைப்பு நிறுவனம்

சில வருடங்களுக்கு முன்னர் Compaq எனும் நிறுவனம் குறைந்த விலையிலான லேப்டொப்களை சந்தையில் அறிமுகம் செய்திருந்தது.

பலத்த வரவேற்பைப் பெற்றிருந்த இந்நிறுவனத்தின் லேப்டொப்களிற்கு பின் நாட்களில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைத்திருக்கவில்லை.

இதனால் சில வருடங்களாக லேப்டொப்களை வடிவமைக்காது இருந்து குறித்த நிறுவனம் மீண்டும் இலத்திரனியல் சந்தையில் காலடி பதிக்கவுள்ளது.

இம் முறை லேப்டொப்களிற்கு பதிலாக தொலைக்காட்டிப் பெட்டிகளை அறிமுகம் செய்யவுள்ளது.

அதாவது இந்தியாவில் ஸ்மார்ட் தொலைக்காட்சிகளை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இதேவேளை Kodak, Nokia போன்ற நிறுவனங்களும் தொலைக்காட்சி வடிவமைப்பில் காலடி பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.