தொழில்நுட்ப பயன்பாட்டில் சிங்கப்பூரை விஞ்சியது இந்தியா!

ஆசிய நாடுகளில், அதிவேக இன்டர்நெட் மற்றும் பைபர் பிராட்பேண்ட் பயன்பாட்டில் முன்னிலை வகிக்கும் நாடு சிங்கப்பூர். குட்டித் தீவு நாடான சிங்கப்பூர், தொழில்நுட்பத்தில் மட்டுமின்றி, பொருளாதாரத்திலும் வேகமான வளர்ச்சி கண்டுள்ளது.

இந்நிலையில், வாடிக்கையாளர் சேவை, அவர்களின் தேவைகளை நிறைவேற்றுதல், அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தல், சந்தேகங்களை தீர்த்தல் போன்ற விஷயங்களை கையாள்வதில் தொழில்நுட்பத்தை அதிகம் பயன்படுத்துவதில்,  சிங்கப்பூரை பின்னுக்கு தள்ளி, ஆசிய அளவில், இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

ஆர்ட்டிபீசியல் இன்டலிஜன்ஸ் எனப்படும் நவீன முறையை கையாள்வதின் மூலம், வாடிக்கையாளர்கள் எதை விரும்புகின்றனர், அவர்களுக்கு எது தேவை, அது எங்கு கிடைக்கும் என்பது குறித்த பல சேவைகளை உடனுக்குடன் வழங்க முடியும். அந்த வகையில், ஏ.ஐ., முறை பயன்பாட்டில், இந்தியா முன்னிலை வகிக்கிறது.

பணியிடங்களில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துதல், தொழில்நுட்ப பயன்பாட்டின் மூலம், தன் பணிச்சுமையை குறைத்துக் கொள்ளுதல், ஹார்டு ஒர்க் அல்லாமல் ஸ்மார்ட் ஒர்க் மூலம் திட்டமிட்ட பணியை எளிதில் செய்து முடித்தல், டிஜிட்டல் தொழில்நுட்ப பயன்பாட்டால், பணித்திறனை அதிகரித்தல் போன்றவற்றில் சிறப்பாக செயல்படும், ஆசிய நாடுகளின் பட்டியலில், சிங்கப்பூரை பின்னுக்கு தள்ளி இந்தியா முதலிடம் பிடித்துள்ளதாக, ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!