நாசாவின் புதிய ஆப்…இலகுவாக விண்வெளி வீரராகலாம்

விண்வெளிக்கு சென்றால்தான் விண்வெளி வீரர் என்ற பட்டம் கிடைக்கப்போவதில்லை வீட்டிலிருந்த விண்வெளி வீரர் போன்ற புகைப்படத்தை பெற நாசா புதிய அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது.

விண்வெளிக்கு சென்று செல்பி எடுக்க வேண்டும் என்பது பலரின் கனவாகவும், வாழ்நாள் ஆசையாகவும் இருக்கலாம் ஆனால் அது ஒருபோதும் நடக்காது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். நாம் யாரும் விண்வெளிக்கு சென்று விண்வெளி நட்சத்திரக் கூட்டங்களுக்கு மத்தியில் செல்பி எடுக்க முடியாது. ஆனால் நாசா அதற்கு ஒரு வாய்ப்பு அளித்திருக்கிறது.

ஸ்பிட்சர் விண்வெளி தொலைநோக்கியின் (Spitzer Space Telescope) 15வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, நாசா ஐஓஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு செல்போன்களில் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆப்பின் மூலம்  முன் மற்றும் பின் கேமராக்களைப் பயன்படுத்தி புகைப்படம் எடுத்தால் விண்வெளி வீரருடைய தலைக் கவசம் அணிந்தப்படி விண்வெளிக்கு நடுவே புகைப்படம் எடுத்ததுபோன்ற தோரணையை உருவாக்க முடியும். பின்னர் Spitzer டெலஸ்கோப் படம்பிடித்த படங்களில் உங்களுக்கு விருப்பமான புகைப்படத்தை தேர்ந்தெடுத்து அதற்கு நடுவில் நாம் இருப்பது போன்று எடிட் செய்துகொள்ள முடியும். இச்செயலியை ஐடியூன்ஸ் மற்றும் பிளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்துகொள்ளலாம் என நாசா தெரிவித்துள்ளது.

Sharing is caring!