நாசா விண்வெளி வீரராக பணியாற்ற ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள்

புதிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கான திட்டத்தில் விண்வெளி வீரர்களை இணைத்துக்கொள்வதற்கான விண்ணப்பத்தினை நாசா விண்வெளி ஆய்வு மையம் கோரியிரந்தது.

இதற்காக சுமார் 12,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் இரண்டாம் திகதி முதல் 31 திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நிலையிலேயே இவ்வளவு விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றதாக நாசா தெரிவித்துள்ளது.

இதில் தெரிவு செய்யப்படுபவர்கள் எதிர்காலத்தில் இடம்பெறவுள்ள நிலவு மற்றும் செவ்வாய் கிரகங்கள் தொடர்பான ஆய்வுகளின்போது தமக்கு ஒத்துழைப்பு வழங்குவார்கள் என நாசா குறிப்பிட்டுள்ளது.

மேலும் இவ்வாறு தெரிவு செய்யப்படும் விண்வெளி வீரர்களை 2021 ஆம் ஆண்டு கோடை காலப் பகுதியில் அறிமுகம் செய்து வைப்பதற்கும் நாசா திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.