நிலவில் தரையிறங்கவுள்ள சந்திராயன்-2 விண்கலம்

சந்திராயன்-2 விண்கலம் நாளை (07) அதிகாலை 1.55-க்கு நிலவில் தரையிறங்கவுள்ளது.

நிலவின் தென் துருவத்தில் தரையிறங்க உள்ள முதலாவது விண்கலம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரோவின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து சந்திராயன்-2 விண்கலம் நிலவில் தரையிறங்குவதை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு நேரலையாகக் காண்பிக்கப்படவுள்ளது.

அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு பின்னர் நிலவில் விண்கலத்தைத் தரையிறக்கும் பெருமையை சந்திராயன்-2 மூலம் இந்தியாவும் பெறவுள்ளது.

Sharing is caring!