நிலவை முதன்முதலாக படமெடுத்து அனுப்பிய சந்திரயான் விண்கலம்…!!

இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலம் முதல் முறையாக நிலவை ஒளிப்படம் எடுத்து அனுப்பியுள்ளது.

நிலவின் மேற்பரப்பிலிருந்து 2650 கிலோ மீட்டர் தூரத்தில் சந்திரயான் இந்த ஒளிப்படத்தை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.புகைப்படத்தில் மரே ஓரியண்டல் தளம் மற்றும் அப்போலோ எரிமலைகள் குறிப்பிடப்பட்டுள்ளன.நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக 978 கோடி ரூபாய் செலவில், சந்திரயான் 2 விண்கலத்தை, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வடிவமைத்தது.ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் என மூன்று நிலைகளைக் கொண்ட சந்திரயான்-2 விண்கலம் கடந்த மாதம் 22-ஆம் திகதி சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது.இந்த விண்கலம் செப்டம்பர் 7-ஆம் திகதி நிலவில் தரையிறங்குவதாக இஸ்ரோ தகவல் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சந்திரயான் 2 விண்கலம் நிலவை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!