படுக்கையறைகளில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும்

படுக்கையறைகளில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

படுக்கையறையில் கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்துவதால், மூளை மற்றும் நுரையீரலுக்கு பாதிப்பு ஏற்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உறங்கச்செல்வதற்கு முன்னர், படுக்கையறையில் இருந்து அவ்வாறான பொருட்களை அகற்றுமாறும் அல்லது செயலிழக்க செய்யுமாறும் பாவனையாளர்களை சுகாதாரப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

உலக மனநல தினத்தை முன்னிட்டு சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், நீண்டநேரம் கையடக்கத் தொலைபேசியைப் பயன்படுத்துவதும் உடல் பாதுகாப்பிற்கு உகந்ததல்ல அல்ல இந்த கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தேசிய தொற்றுநோய் ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர், டொக்டர் பபா பலிஹவடன தெரிவித்தார்.

Sharing is caring!