பட்ஜட் விலையில் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யும் Realme

Realme நிறுவனமானது தனது புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியான C11 இனை அறிமுகம் செய்துள்ளது.

இக் கைப்பேசியானது 6.5 அங்குல அளவுடைய HD+ தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Helio G35 mobile processor, பிரதான நினைவகமாக 2GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினையும் கொண்டுள்ளது.

இதன் சேமிப்பு நினைவகமானது microSD கார்ட்டின் உதவியுடன் 256GB வரை அதிகரிக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.

மேலும் 5 மெகாபிக்சல்களை உடைய செல்ஃபி கமெரா, 13 மெகாபிக்சல்கள், 2 மெகாபிக்சல்களை உடைய இரு பிரதான கமெராக்கள் என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Mint Green மற்றும் Pepper Grey ஆகிய நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இக் கைப்பேசியில் 5000mAh மின்கலமும் தரப்பட்டுள்ளது.

இதேவேளை இக் கைப்பேசியின் விலையானது 100 அமெரிக்க டொலர்கள் ஆகும்.

Sharing is caring!