பட்ஜட் விலையில் 5G கைப்பேசிகளை தயாரிக்க புதிய Processor உருவாக்கம்

கடந்த வருடமே 5G தொழில்நுட்பத்தினைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டுவருகின்றன.

எனினும் அவற்றின் விலை சற்று அதிகமாகவே காணப்படுகின்றது.

இந்நிலையில் குறைந்த விலையில் 5G கைப்பேசிகளை அறிமுகம் செய்வதற்கு ஏற்ற வகையில் அவற்றிற்கு தேவையான நவீன Processor உருவாக்கப்பட்டுவருவதாக Qualcomm நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கு Qualcomm Snapdragon 690 5G mobile processor எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மேலும் இவை 20 சதவீதம் அதிகமான புரோசசிங் வலுவுடையதாகவும், 60 சதவீதம் அதிகமான கிராபிக்ஸ் வலு உடையதாகவும் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிர 4K வீடியோ ரெகார்டிங் மற்றும் 192 MP கமெரா வலு என்பவற்றினையும் தரக்கூடியதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.