பலராலும் பாராட்டுப் பெற்று வரும் முகநூலில் வெளியாகி உள்ள மூன்று புகைப்படங்கள்

ங்க தேசத்தில் தற்போது  பலராலும் பாராட்டுப் பெற்று வருகிறது.

முகநூல் உபயோகிப்பாளர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டிவிட்டரில் பல பிரபலங்கள் தீவிரமாக பதிவு இட்ட போதிலும் அதை விட முகநூல் பதிவுகள் பலரை சென்று அடைகின்றன. இந்த முகநூல் ரசிகர்கள் உலகெங்கும் உள்ளது போல் வங்க தேசத்திலும் அதிக அளவில் உள்ளனர்.

ங்க தேச புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் ஷாகிப் அலி ஹசன் தனது மனைவி மற்றும் சிறு குழந்தையான தனது மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்துக்கு பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் லைக் மற்றும் அன்பை தெரிவித்துள்ளனர். அத்துடன் “வாழ்த்துக்கள் ஹசன்” என்னும் பின்னூட்டமும் ஏராளமானோர் பதிந்துள்ளனர்.

புகழ் பெற்ற வங்க தேச நடிகையான சப்னம் ஃபரியா தனது முகநூல் பக்கத்தில் ஏற்கனவே வெளியிட்ட ஒரு படத்தை மீண்டும் பதிந்துள்ளார். இந்த பதிவுக்கு ஏற்கனவே பலர் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். தற்போது மீண்டும் ஏராளமான ரசிகர்கள் தங்கள் அன்பை தெரிவித்துள்ளனர். பலரும் “அருமை என பின்னூட்டம் இட்டுள்ளனர்.

வங்க தேசத்தின் அழகு என்னும் பக்கத்தில் வெளி வந்துள்ள படத்துக்கு மிகவும் விருப்பம் தெரிவித்துள்ளனர். அந்த படத்தில் ஒரு பட்டதாரி தனது தந்தை ஓட்டும் ரிக்‌ஷா வில் டை அணிந்து பெற்றோரை வைத்து ஓட்டிச் செல்கிறார். பட்டதாரியின் தந்தை அந்த பட்டமளிப்பு கவுனையும் தாய் அந்த பட்டமளிப்பு தொப்பியையும் அணிந்துள்ளனர். இதற்கும் மக்கள் பெரிதும் வரவேற்பளித்துள்ளனர். “வாழ்த்துக்கள்’ என்னும் பின்னூட்டம் ஆயிரக்கணக்கில் இட்டுள்ளனர்.

 

Sharing is caring!