பாதுகாப்பற்ற பேஸ்புக் கணக்குகளை ஊடுருவ முயற்சி

பாதுகாப்பற்ற பேஸ்புக் கணக்குகளை ஊடுருவுவதற்கு சில குழுக்கள் முயற்சிக்கின்றமை தெரியவந்துள்ளதாக இலங்கை தகவல் தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த சில வாரங்களுக்குள் இந்தக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ரஜீவ் யசிரு குருவிட்டகே குறிப்பிட்டுள்ளார்.

Phishing Attack எனும் முறையிலேயே பாதுகாப்பற்ற பேஸ்புக் கணக்குகள் ஊடுருவப்படுவதாக அவர் கூறியுள்ளார்.

இதனால், பேஸ்புக் கணக்குகளை பாதுகாப்பான முறையில் வைத்துக் கொள்ளுமாறு பயனாளிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

Sharing is caring!