பில்லியன் கணக்கானவர்களின் முக அடையாளங்கள் ஹேக் செய்யப்பட்டது
Facial Recognition எனும் முக அடையாளங்களை ஒப்பீடு செய்யும் தொழில்நுட்பத்தினை வழங்கும் பிரபல நிறுவனங்களுள் ஒன்றாக Clearview AI திகழ்கின்றது.
இந்நிறுவனமான அமெரிக்காவினை தளமாகக் கொண்டு இயங்கி வருகின்றது.
இந்நிலையில் குறித்த நிறுவனத்தின் தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்டிருந்த முக அடையாளப் படங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 3 பில்லியன் வரையான படங்கள் இவ்வாறு ஹேக் செய்யப்பட்டுள்ளன.
ஹேக் செய்யப்பட்ட படங்களுள் அதிகமானவை அமெரிக்காவை சேர்ந்தவர்களுடையது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தள தாக்குதல் மூலமாகவே குறித்த புகைப்படங்கள் அனைத்தும் ஹேக் செய்யப்பட்டுள்ளன.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S