புதிய சரித்திரம் படைத்தது ஆப்பிளின் iPhone 11 ஸ்மார்ட் கைப்பேசி

ஆப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone 11 எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்திருந்தமை தெரிந்ததே.

அத்துடன் இவ் வருடம் iPhone 12 கைப்பேசிகளையும் அறிமுகம் செய்துள்ளது.

இந்நிலையில் கடந்த வருடம் கிறிஸ்துமஸ் தினத்தில் அதிக அளவில் ஆக்டிவேட் செய்யப்பட்ட ஸ்மார்ட் ஐபோன் கைப்பேசியாக iPhone 11 இடம் பிடித்துள்ளது.

ஆக்டிவேட் செய்யப்பட்டதில் 90 சதவீதமானவை iPhone 11 கைப்பேசிகள் எனவும், 10 சதவீதமானவை ஏனைய ஐபோன்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறெனினும் கடந்த 2019 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் ஆக்டிவேட் செய்யப்பட்ட ஐபோன்களின் எண்ணிக்கையினை விடவும் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆக்டிவேட் செய்யப்பட்ட ஐபோன்களின் எண்ணிக்கை குறைவு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதாவது 23 சதவீதம் வரை குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் கடந்த வருடம் அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருந்த கொரோனா பரவலே இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!