புதிய வசதிகள், புதிய தோற்றம் என அட்டகாசம் காட்டும் கூகுள் மேப்
கூகுள் நிறுவனம் தனது மேப் சேவையை அறிமுகம் செய்து 15 வருட நிறைவினை எட்டியுள்ளது.
இதனை கொண்டாடும் முகமாக புதிய கூகுள் மேப் பதிப்பு ஒன்று அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இப் புதிய பதிப்பு முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தினைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
தவிர புதிய Explore Tab வசதி உட்பட மேலும் சில புதிய வசதிகளும் உள்ளடக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப் புதிப்பு விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள நிலையில் அன்ரொயிட் மற்றும் iOS பயனர்கள் இருவரும் இப் பதிப்பினை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும் எனவும் கூறப்பட்டுள்ளது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S