புதிய வசதியை அறிமுகம் செய்த இன்ஸ்டாகிராம்..!!

பேஸ்புக் நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் இன்ஸ்டாகிராமினை பல மில்லியன் வரையானவர்கள் பயன்படுத்திவருகின்றனர்.

இதனைப் பயன்படுத்துவதற்கான விசேட அப்பிளிக்கேஷனும் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்தாமல் நேரடியாக இணையப் பக்கத்திலிருந்தே குறுஞ்செய்தியை அனுப்புவதற்கான வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது.

இந்த தகவலை உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக இன்ஸ்டாகிராம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே பயனர்கள் இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்தாது லேப்டொப் அல்லது டெக்ஸ்டாப் கணினியிலிருந்து நேரடியாக குறுஞ்செய்தியை அனுப்ப முடியும்.

Sharing is caring!