புத்தம் புதிய சாதனம் ஒன்றினை அறிமுகம் செய்யும் ஆப்பிள்

தற்போது உலக அளவில் உள்ள பதட்டமான நிலையில் பல்வேறு இலத்திரனியல் சாதன உற்பத்தி நிறுவனங்களும் தங்கள் புதிய உற்பத்திகளை அறிமுகம் செய்வதை பிற்போட்டுள்ளன.

எனினும் ஆப்பிள் நிறுவனம் அடுத்த வாரம் தனது புதிய சாதனம் ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி புதிய MacBook Air சாதனத்தினையே அறிமுகம் செய்யவுள்ளது.

எவ்வாறெனினும் ஏற்கனவே திட்டமிட்டதன்படி iPhone 9 புதிய மொடல் உட்பட மேலும் சில சாதனங்கள் அறிமுகம் செய்யவிருந்த நிலையில் பிற்போடப்பட்டிருந்தது.

அதுமாத்திரமன்றி இவ் வருடம் அறிமுகம் செய்யப்படவுள்ள iPhone 12 ஒரு மாத காலம் வரை தாமதமாகும் என்ற தகவலும் ஏற்கனவே வெளியாகியிருந்தது.

இந்நிலையிலேயே இப் புதிய தகவல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!