புத்தம் புதிய Galaxy S11 எனும் கைப்பேசியை அறிமுகம் செய்த சாம்சுங் நிறுவனம்…!!!

வருடம் தோறும் பல வகையான ஸ்மார்ட் கைப்பேசிகளை சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்து வருகின்றது.

எனினும் இவற்றில் Galaxy S தொடரிலான கைப்பேசிகளை ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்து வருகின்றது.

இதனால் இக் கைப்பேசியே சாம்சுங் பிரியர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்றது

அடுத்த வருடம் Galaxy S11 எனும் கைப்பேசியினை சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசியில் வழமைக்கு மாறாக 4500mAh கொண்ட மின்கலத்தினை உள்ளடக்கவுள்ளது.

Galaxy S தொடர் கைப்பேசிகள் அதிக வினைத்திறன் கொண்டிருப்பதனால் மின்கலங்கள் குறைந்தளவு நேரத்திற்கே மின்சக்தியை வழங்கக்கூடியதாக இருக்கின்றன.

எனவே கூடிய நேரத்திற்கு மின்சக்தியை வழங்குவதற்காக இம் மாற்றம் மேற்கொள்ளப்படவுள்ளது.

Sharing is caring!