புவியை படம்பிடித்து அனுப்பிய சந்திரயான் – 2 விண்கலம்!

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் -2 விண்கலம், முதலாவதாக புவியை படம்பிடித்து அனுப்பியுள்ளது.

நிலவின் தென்துருவ பகுதியை ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட சந்திரயான் – 2 விண்கலம்,  ஜி.எஸ்.எல்.வி மார்க் 3- எம்.1 ராக்கெட் உதவியுடன், ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து கடந்த ஜூலை 22ம் தேதி பிற்பகல் 2:43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

சந்திரயான் -2 விண்கலம் புவியின் நான்காவது சுற்றுவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டு சரியான பாதையில் பயணித்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், இஸ்ரோவின் கட்டுப்பாட்டில் இருக்கும் சந்திரயான் -2, தன்னிடம் உள்ள  Ll4 கேமராவின் உதவியுடன் முதல் முறையாக புவியை படம்பிடித்து அனுப்பியுள்ளது. இந்த புகைப்படங்களை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

Sharing is caring!