பூமிக்கு திரும்புகிறார்; 329 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த வீரர்

விண்வெளி வீரர் பூமிக்கு திரும்புகிறார்… சர்வதேச விண்வெளி மையத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருந்து சாதனை செய்த விண்வெளி வீரர் கிறிஸ்டியனா கோச் இன்று பூமிக்குத் திரும்ப உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 14ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்குச் சென்ற கோச், 329 நாட்கள் தொடர்ச்சியாக அங்கு தங்கியுள்ளார். சர்வதேச விண்வெளி மையத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருந்த வீரர்கள் பட்டியலில் தற்போது அவர் 2ம் இடம் பிடித்துள்ளார்.

இந்தக் காலகட்டத்தில் பூமியை அவர் 5 ஆயிரத்து 248 முறை சுற்றி வந்துள்ளார். மேலும் 42 மணி நேரம் விண்வெளி மையத்திற்கு வெளியே செலவிட்டுள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. முன்னதாக கோச்சின் விண்வெளி நடைபயணத்தைப் பாராட்டி அமெரிக்க அதிபர் டிரம்ப் அவருடன் தொலைபேசியில் பேசியது குறிப்பிடத்தக்கது.

கோச்சின் இந்தச் சாதனை செவ்வாய் கிரகத்தின் மீதான சோதனைக்கு உதவும் என்றும் நாசா குறிப்பிட்டுள்ளது.

Sharing is caring!