பேஸ்புக்கால் 8 ஆண்டுகளின் பின் தாயுடன் இணைந்த மகன்

தெலுங்கானாவில் பேஸ்புக் உதவியால் வாலிபர் ஒருவர் 8 வருடங்களுக்கு பின்னர் தனது தாயிடம் சேர்ந்தசம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஹைதராபாத் அருகேயுள்ள குஷய்குடா பகுதியைச் சேர்ந்தவர் சூஸானா. இவர் தனது மகன் தினேஷ் ஜெனாவைக் காணவில்லை என கடந்த 2011ம் ஆண்டு குஷய்குடா காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை அடுத்து போலீசார் விசாரித்ததில், அவரது மகனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த புகார் கடந்த 8 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்தது.

இந்தநிலையில் பேஸ்புக்கில் தனது மகன் பெயரில் ஒரு அக்கவுண்ட் இருப்பதை சூஸானா சமீபத்தில் கண்டுபிடித்தார். இதனால் இன்ப அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக குஷய்குடா போலீஸ் ஸ்டேனில் புதிதாக ஒரு புகாரைப் பதிவு செய்தார்.

புகாரின் பேரில் பொலிசார் சைபர் க்ரைம் பிரிவு உதவியுடன் அந்த பேஸ்புக் அக்கவுண்ட் செயல்படும் ஐபி அட்ரஸை ட்ரேஸ் செய்தனர். அந்த அக்கவுண்ட் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் இருந்து செயல்படுவதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து பஞ்சாப் விரைந்த தெலங்கானா போலீசார், சூஸானாவின் மகனான தினேஷ் ஜெனாவைக் கண்டுபிடித்து அவருடன் சேர்த்து வைத்தனர்.

கடந்த 8 ஆண்டுகளாகப் பிரிந்திருந்த தாய், தனது மகனுடன் பேஸ்புக்கால் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Sharing is caring!