பேஸ்புக்கில் இத்தனை கோடி போலி கணக்குகளா?

உலகிலேயே அதிகளவு பயனர்களைக் கொண்ட ஒரே ஒரு சமூகவலைத்தளமாக பேஸ்புக் காணப்படுகின்றது.

எனினும் இதில் பல பயனர்கள் போலியான கணக்குகளையும் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது பேஸ்புக்கில் பயன்படுத்தப் படும் போலி கணக்குகள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி உலகெங்கிலும் சுமார் 27.5 கோடி போலி பேஸ்புக் கணக்குள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி அறிக்கையின்படி பேஸ்புக்கில் மாதாந்தம் 2.50 பில்லியன் ஆக்டிவ் பயனர்கள் காணப்படுகின்றனர்.

இதேவேளை இந்தியாவில் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதியுடன் ஒப்பிடும்போது 8 சதவீதத்தினால் பயனர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு முடிவில் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!