பேஸ்புக் அறிமுகம் செய்யும் Messenger Chatbot..!!
கடந்த வெள்ளிக்கிழமை பேஸ்புக் நிறுவனமானது Messenger Chatbot இனை அறிமுகம் செய்துள்ளது.
இது COVID-19 தொடர்பான தகவல்களை தருவதற்கும், இது தொடர்பான போலியான தகவல்கள் தொடர்பில் தெரியப்படுத்துவதற்குமாக உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவில் இச் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் சுகாதார அமைச்சு மற்றும் MyGov என்பவற்றுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் வலைத்தளத்தின் ஊடாகவே அதிகளவு போலியான தகவல்கள் பரப்பப்பட்டுவருகின்றன.
எனவே இவற்றினை தடுத்து மக்கள் மத்தியில் ஏற்படும் பீதியை குறைக்க இப் புதிய வசதி பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S