பேஸ்புக் நிறுவனம் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம் பயனார்களுக்காக புதிய கட்டுப்பாட்டினை அறிமுகம் செய்துள்ளது.

மரணித்த ஒருவர் குறித்து வெளியிடப்படும் கேலி செய்திகள் அல்லது மரணத்தை தூண்டும் வகையில் கருத்துக்களைபதிவிடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இவ்வாறான கருத்துக்கள் ஆரம்பத்தில் பேஸ்புக் எந்தவித தடையையும் ஏற்படுத்தவில்லை. எனினும் தற்போது புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் பற்றி பதிவு செய்யப்படும் தரக்குறைவான கருத்துக்களை சம்மந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர் பேஸ்புக் நிறுவனத்திடம் முறையிடலாம்.

பேஸ்புக் கணக்கு வைத்திருக்கும் ஒருவர் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களது பேஸ்புக் கணக்கினை Memorialized பக்கத்தில் சேர்க்கும் வசதியை அந்நிறுவனம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!