பேஸ்புக் மெசஞ்சரினூடு உரையாடுவதை எவரும் ஒட்டுக்கேட்க முடியும்

பேஸ்புக் அப்பிளிக்கேஷனைப் பயன்படுத்துபவர்கள் கண்டிப்பாக பேஸ்புக் மெசஞ்சரினையும் பயன்படுத்துவார்கள்.

இதன் ஊடாக சட்டிங் செய்தல், வீடியோக்கள், புகைப்படங்களை பகிருதல் உட்பட ஆடியோ, வீடியோ அழைப்புக்களையும் ஏற்படுத்தி மகிழ முடியும்.

இவ்வாறு ஏற்படுத்தப்படும் ஆடியோ, வீடியோ அழைப்புக்களை எவரும் இலகுவாக ஒட்டுக்கேட்ட முடியும் என்பதை பேஸ்புக் நிறுவனம் கண்டறிந்துள்ளது.

அன்ரோயிட் சாதனங்களுக்கான பேஸ்புக் மெசஞ்சரிலேயே இக் குறைபாடு காணப்பட்டுள்ளது.

எனினும் துரிதமாக செயற்பட்ட பேஸ்புக் நிறுவனம் குறித்த குறைபாட்டினை நிவர்த்தி செய்துள்ளது.

எனவே பயனர்கள் பயமின்றி தொடர்ந்து பேஸ்புக் மெசஞ்சரினை பயன்படுத்த முடியும்.

Sharing is caring!