மீண்டும் கூகுள் பிளே ஸ்டோரில் Paytm

இந்தியாவிலேயே ஒன்லைன் மூலமான பணப்பரிவர்த்தனைக்கு பெயர் பெற்ற இணையத்தளமாக Paytm விளங்குகின்றது.

இதற்கான மொபைல் அப்பிளிக்கேஷன்களும் ஏற்கணவே வெளியிடப்பட்டுள்ளன.

எனினும் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து குறித்த அப்பிளிக்கேஷன் திடீரென நீக்கப்பட்டிருந்தது.

கூகுளின் கொள்கைகளை மீறியமையினாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் பிளே ஸ்டோரில் Paytm அப்பிளிக்கேன் தரப்பட்டுள்ளது.

இந்த தகவலை Paytm நிறுவனம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தினூடாக வெளியிட்டுள்ளது.

இதில் நாங்கள் மீண்டும் வந்துவிட்டோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.