முகக் கவசம் தயாரிப்பதற்கு சிறந்த துணிவகையை கண்டுபிடித்தனர் விஞ்ஞானிகள்

தற்போதுள்ள கொரோனா அச்சுத்தல் சூழலில் வீட்டை விட்டு வெளியின் சென்றாலே முகக் கவசம் அவசியமாக அணிய வேண்டிய கட்டாயம் காணப்படுகின்றது.

இதற்காக ஆரம்ப கட்டத்தின் N95 வகை முகக் கவசத்தினை மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கினார்.

இதனால் மருத்துவ சேவை செய்பவர்கள் பயன்படுத்த வேண்டிய குறித்த முகக்கவசத்திற்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது.

எனவே மக்கள் துணிகளைப் பயன்படுத்தி முகக்கவசங்களை தயாரிக்க தொடங்கினர்.

எனினும் அனைத்து வகையான துணிகளும் கிருமிகள் பரவுவதை தடுக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பான ஆய்வு ஒன்றினை சிக்காக்கோ பல்கலைக்கழகத்தில் உள்ள Argonne National Laboratory ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டிருந்தனர்.

இந்த ஆய்வின் முடிவில் பல படைகளைக் கொண்டதும், கலவையான துணி வகைகளை கொண்டு நெய்யப்பட்ட துணிகளே கிருமி பரவுவதை தடுக்கும் என கண்டறிந்தனர்.

இதனால் இவ்வாறான துணி வகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் முகக்கவசங்கள் சிறந்ததாக இருக்கும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Sharing is caring!