முகநூல் நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம்

உலகம் முழுவதும் அதிகளவிலான பயனாளர்களால் பயன்படுத்தப்படும் சமூக வலைத்தளமான முகநூல் நிறுவனத்திற்கு ரூ. 5 கோடி அபராதம் விதித்துள்ளது இங்கிலாந்து தகவல் ஆணையம்.

சமூக வலைத்தளங்களில் உலகளாவிய அளவில் அதிகளவில் பயன்படுத்தப்படும் முகநூல் நிறுவன பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியான நிலையில், முகநூல் நிறுவனமும் அந்த தகவலை உறுதிப்படுத்தியதுடன் அதற்காக தமது பயனாளர்களிடம் மன்னிப்பு கோரியது.

இங்கிலாந்தில் செயல்பட்டு வரக்கூடிய கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற ஆலோசனை நிறுவனம் மூலமாகவே இந்த தகவல் திருட்டு நடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் தேர்தல் சமயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவே இச்சம்பவம் நடைபெற்றதாக செய்திகள் வெளியானது. இது தொடர்பாக அமெரிக்காவின் செனட் சபையிலும் நேரில் ஆஜராகி விளக்கமும் அளித்திருந்தார் முகநூல் நிறுவனர் மார்க்.

அதே சமயம், இங்கிலாந்தின் தகவல் கண்காணிப்பு அமைப்பு அலுவலகம் மேற்கண்ட விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் தற்போது முகநூல் நிறுவனத்திற்கு ரூ. 5 லட்சம் பவுண்ட் அபராதம் விதித்துள்ளது. இந்திய மதிப்பில் ரூ. 4.75 கோடியாகும்.

Sharing is caring!