முதன் முறையாக Asus நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசி!

ஹேம் பிரியர்களுக்காகவே விசேடமாகத் தயாரிக்கப்பட்ட கணினிகள் ஏற்கணவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இவை Gaming PC என அழைக்கப்படும். இவற்றின் வினைத்திறனானது சற்று அதிகமாகவே காணப்படும்.

அதேபோன்று தற்போது ஹேமிங் ஸ்மார்ட் கைப்பேசியினை முதன் முறையாக Asus நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்நிலையில் குறித்த கைப்பேசி தொடர்பான புகைப்படங்கள் உட்பட மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி Asus ROG Phone 3 எனும் குறித்த கைப்பேசியானது 6.59 அங்குல அளவு மற்றும் FHD+ தொழில்நுட்பத்தினைக் கொண்ட தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 865 mobile processor, பிரதான நினைவகமாக 16GB RAM, 30W விரைவாக சார்ஜ் ஆகக்கூடிய 6000 mAh மின்கலம் என்பனவும் தரப்பட்டுள்ளன.

இவற்றுடன் 64 மெகாபிக்சல்களை கொண்ட கமெரா உட்பட 3 பிரதான கமெராக்களையும் கொண்டுள்ளது.

எனினும் இதன் மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

Sharing is caring!