முதற்கட்டமாக ட்விட்டரில் போலியான கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன

சமூக வலைத்தளங்களில் புரளிகள் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையின் முதற்கட்டமாக ட்விட்டரில் போலியான கணக்குகள் நீக்கப்பட்டுள்ளன.

குழந்தைகள் கடத்தல், நோய், பேரிடர் என பல்வேறு விடயங்கள் தொடர்பாக போலியான ட்விட்டர் கணக்குகள் மூலம் பரவும் புரளிகளால் பல்வேறு சமுதாய சிக்கல்கள் ஏற்படுகின்றன.

இதனால், போலிக்கணக்குகளை நீக்கும் நடவடிக்கையை ட்விட்டர் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் சுமார் 70 இலட்சம் போலிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து, பல முக்கிய தலைவர்களின் பின்தொடர்வோர் எண்ணிக்கை பாரியளவில் குறைவடைந்துள்ளது.

போலியான ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதால், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பின்தொடர்வோர் எண்ணிக்கை சுமார் ஒரு இலட்சம் வரை குறைவடைந்துள்ளது.

இதேபோல், முன்னாள் அதிபர் ஒபாமாவை பின்தொடர்வோர் எண்ணிக்கை சுமார் 4 இலட்சம் குறைவடைந்துள்ளது.

இதனால் ட்விட்டரில் அதிக பின்தொடர்வோரைக் கொண்ட பிரபலங்களின் பட்டியலில் லேசான தடுமாற்றம் ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

Sharing is caring!