யுட்டு-2 (Yutu-2) அடுத்த படிநிலை

சீனாவின் புதிய நிலவு ஆராய்ச்சி திரிசாரணனான (ரோவர்) யுட்டு-2 (Yutu-2) தனது தரையிறங்கும் விண்கலத்தில் இருந்து வௌியேறி அடுத்த படிநிலை ஆய்வுகளை ஆரம்பித்துள்ளது.

இந்த ஆய்வு திரிசாரணன் வாகனத்திற்கு பச்சை முயல் என்று பொருள்படும் ஜேட் ரெபிட்-2 என்றும் பெயரிட்டுள்ளனர்.

குறித்த வாகனம் தற்போது நிலவின் இருண்ட பகுதியின் மேற்பரப்பில் நகர்ந்து சென்று மேலதிக விஞ்ஞான கண்டுபிடிப்புகளை மேற்கொண்டு வருகின்றது.

நிலவின் மீதான யுட்டு-2 வின் முதல் காற்பதிப்பு சீனாவின் புதிய மற்றும் அடுத்த கட்ட ஆய்வு பயணயத்தின் வெற்றி என்று கருதப்படுகிறது.

குறித்த ரோவர் ஆய்வு வாகனம் கடந்த வியாழக்கிழமை சாத்தியமான விண்வௌி பயணத்தின் சிறப்பம்சமாக நிலவின் தரையில் சென்று இறங்கியது.

அதன்பின்னர் துணை செய்மதி ஒன்றின் உதவியுடன் நிலவின் ஔிப்படங்களை பூமிக்கு எடுத்து அனுப்பியது.

இந்த தகவல்களை ஷாங் இ-4 நிலவிற்கான பயணத்தின் வடிவமைப்பாளர் மற்றும் துணை தலைமை கட்டளை அதிகாரி ஷாங் யூஹா வௌியிட்டுள்ளார்.

ஜேட் ரெபிட்-2 ஆய்வு திரிசாரணன் நிலவின் பகல் நேரங்களில் தனது ஆராய்ச்சிகளை மேற்கொள்வதுடன் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை பணியை தொடரும் என்று அவர் குறிப்பிட்டார்.

அதன்பின்னர் 14 நாட்கள் நீண்ட சந்திரன் இரவு வருவதன் காரணமாக ஆய்வுப் பணிகள் ஒத்திவைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!