யூடியூப் தளத்தில் மொழியினை தாம் விரும்பியவாறு மாற்றியமைப்பது எப்படி?

நாள்தோறும் பல மில்லியன் வரையான பயனர்கள் யூடியூப் தளத்தில் வீடியோக்களை பார்வையிட்டு வருகின்றனர்.

இத் தளமானது பொதுவாக ஆங்கில மொழியிலேயே கட்டளைகளைக் காண்பிக்கும்.

எனினும் தாம் விரும்பிய மொழியில் யூடியூப் தளத்தின் கட்டளைகளை மாற்றியமைக்கக்கூடிய வசதியும் தரப்பட்டுள்ளது.

இவ்வாறு மொழியினை மாற்றியமைப்பதற்கு கீழ்வரும் படிமுறைகளைப் பின்பற்றவும்.

முதலில் தாம் விரும்பிய இணைய உலாவியினை திறக்கவும்.

அதில் யூடியூப் தளத்திற்கு சென்று காண்பிக்கப்படும் தமது கணக்கிற்கான படம் மீது கிளிக் செய்யவும்.

இப்போது மெனு ஒன்று தோன்றும்.

அவ்வாறு தோன்றும் மெனுவில் Language என்பதை கிளிக் செய்யவும்.

இப்போது தோன்றும் மெனுவில் தாம் விரும்பிய மொழியினை தெரிவு செய்து கிளிக் செய்தால் போதும் அம் மொழியில் யூடியூப் தளத்தின் கட்டளைகள் காண்பிக்கப்படும்.

இங்கு தமிழ் மொழியிலும் மாற்றியமைக்கக்கூடிய வசதி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!