ரியல்மீ நார்சோ 30 போனில் இந்த வசதி இருப்பது உறுதி!

ரியல்மீ நார்சோ 30 மலேசியாவில் மே 18 அன்று அறிமுகம் செய்யப்படும் என்று நிறுவனம் முன்பு அறிவித்திருந்தது, ஆனால் உலகளவில் இந்த ஸ்மார்ட்போன் எப்போது கிடைக்கும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

இப்போது இந்த ஸ்மார்ட்போன் குறித்து சுவாரசியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ரியல்மீ தனது வரவிருக்கும் ரியல்மீ நர்சோ 30 ஸ்மார்ட்போனில் 5,000 mAh பேட்டரி 30W டார்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டிருக்கும் என்று அறிவித்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த ஸ்மார்ட்போன் குறைந்தது 6 ஜிபி ரேம், 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் மூன்று பின்புற கேமராக்களுடன் வரும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. ரியல்மீ இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி மாதவ் ஷெத், ரியல்மீ நார்சோ 30 தொடர் இந்தியாவில் 4 ஜி மற்றும் 5 ஜி வகைகள் கிடைக்கும் என்று அறிவித்திருந்தும் குறிப்பிடத்தக்கது. ரியல்மீ மலேசியா தனது பேஸ்புக் பக்கத்தில் சமீபத்திய பேட்டரி தொடர்பான விவரங்களைப் பகிர்ந்துக் கொண்டுள்ளது.

முன்னதாக, ரியல்மீ நர்சோ 30 4ஜி மாடல் 6.5 அங்குல முழு HD+ LCD டிஸ்ப்ளே 90 Hz திரை புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கும் என்று தெரிவித்துள்ளது. உட்புறத்தில், இது ஒருங்கிணைந்த ARM மாலி-G76 MC4 GPU உடன் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G95 சிப்செட்டைக் கொண்டிருக்கும். மேக்ரோ மற்றும் B&W புகைப்படம் எடுப்பதற்கென முறையே 2 மெகாபிக்சல் சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும். முன்பக்கத்தில் 16 மெகாபிக்சல் பஞ்ச்-ஹோல் கேமரா இருக்கும்.

நினைவுகூர, தற்போது இந்தியாவில் கிடைக்கும் ரியல்மீ நர்சோ 30A மற்றும் ரியல்மீ நர்சோ 30 ப்ரோ 5ஜி ஆகியவை முறையே 6,000 mAh மற்றும் 5,000 mAh பேட்டரிகளுடன் வருகின்றன. ரியல்மீ நர்சோ 30A 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை ஆதரிக்கிறது, புரோ வேரியண்ட்டும் 30W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

Sharing is caring!