லேடிறிட்ஜ்வே மருத்துவமனையின் இதய நிலையத்துக்கு உயிர்காக்கும் கருவிகளை அன்பளித்தது கொமர்ஷல் வங்கி

செயற்றினாக்கப்பட்ட உறையும் நேரக் (Activated Clotting Time – ACT) கருவியொன்றையும் 20 மருந்தூசி இயக்கிகளையும் (syringe pump) கொமர்ஷல் வங்கியானது கொழும்பிலுள்ள லேடிறிட்ஜ்வே மருத்துவமனைக்கு அன்பளித்தது.

அம்மருத்துவமனையின் மூன்று இதய சத்திர சிகிச்சைக் கூடங்களிலும் இரண்டு தீவிர சிகிச்சைப் பிரிவுகளிலும் பயன்படுத்துவதற்காகவே இவை அன்பளிக்கப்பட்டன.

AccrivaHemochron Signature Elite வகையைச் சேர்ந்த ஏ.சி.டி கருவியானது இதய நிலையத்தின் கோரிக்கையைத் தொடர்ந்து வழங்கி வைக்கப்பட்டது. இதயக் கோளாறுகளுடன் பிறந்த குழந்தைகளுக்கு இலவசமான முறையில் இதயச் சத்திர சிகிச்சைகளை மேற்கொள்ளும் இலங்கையிலுள்ள ஒரே தனித்த அமைப்பாக, இந்நிலையம் காணப்படுகிறது. வெறுமனே 500 கிராம் நிறையுள்ள பிறந்த குழந்தைகள் முதல் 20 வயதானவர்கள் வரை, இந்நிலையத்தில் சிகிச்சைகளைப் பெறுகின்றனர்.

இந்நிலையத்தில் ஒவ்வோர் ஆண்டும் 1,200 வரையிலான சத்திர சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுவரை காலமும் அந்நிலையத்தில் காணப்பட்ட கருவியானது அடிக்கடி பழுதடைந்து வந்தநிலையில், புதிய கருவியானது அதைப் பிரதியீடு செய்யவுள்ளது. ஹெப்பாரின் சிகிச்சையளிப்பின் போது அதிக அளவிலான ஹெப்பாரினைப் பயன்படுத்த வேண்டியநிலைமைகளின் போது, அதைக் கண்காணிப்பதற்கே இது பிரதானமாகப் பயன்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலமாக, சத்திர சிகிச்சைகளின் போது உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய உள்ளக இரத்தக் கசிவு, இரத்தம் கட்டியாதல் போன்றவற்றைத் தடுப்பதற்கு உதவுவதாக அமையும். அதேபோல், சத்திர சிகிச்சையின் பின்னர் இந்த மருந்துகளைப் பயன்படுத்தும் போது இரத்தத்தின் தடிப்பைக் கண்காணிக்கவும் உதவும். இப்போது வெளிவந்துள்ள நவீன கருவிகளில் இவற்றைச் சோதிப்பதற்கு மிகவும் சிறிய அளவிலான இரத்தமே தேவைப்படுவதோடு, குழந்தைகளுக்கு மிகவும் பொருத்தமானதாகவும் உள்ளது.

குழந்தைகளின் சிறிய நாளங்களுக்குத் தேவையான அளவு சிறியளவிலான மருந்துகளை வழங்குவதற்கு இந்த மருந்தூசி இயக்குகள் பயன்படுத்தப்படும். இவ்வகையாக மயக்கும் மருந்துகளும் நோயிலிருந்து விடுதலையளிக்கும் மருந்துகளுமே பிரதான மாகவழங்கப்படும். முக்கியமான இந்தக் கருவியை வழங்குவதற்கு கொமர்ஷல் வங்கி எடுத்த நடவடிக்கையானது, ஆரம்பத்திலேயே இதயமாற்றுச் சத்திர சிகிச்சை அல்லது பாரிய இதய சத்திர சிகிச்சையை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்குச் சத்திர சிகிச்சையின் போதும் சத்திர சிகிச்சையின் பின்னரும் சிறந்த பராமரிப்பை வழங்குவதற்கு வழிவழங்கும் என, இதய நிலையம் தெரிவித்தது.

கொமர்ஷல் வங்கியானது இதற்குமுன்னர் ஹோப் (Heart Operations Performed Early – இதயச் சத்திர சிகிச்சைகள் ஆரம்பத்தில் மேற்கொள்ளப்படுதல்) எனப் பெயரிடப்பட்ட லேடிறிட்ஜ்வே மருத்துவமனையில் காணப்படும் இதயச் சத்திர சிகிச்சை நிலையத்துக்கு மயக்கும் கருவித் தொகுதியை வழங்கியிருந்தது. மருத்துவ உதவி தேவைப்பட்டு, ஆனால் காத்திருப்புப் பட்டியலில் காணப்பட்ட 500 சிறுவர்களுக்குச் சத்திர சிகிச்சைகளை ஆண்டொன்றில் மேற்கொள்வதற்காக இது தேவைப்பட்டிருந்தது. இக்கருவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, நூற்றுக் கணக்கான சிறுவர்கள் கடினமான இதயச் சத்திர சிகிச்சைகளுக்கு உள்ளாகியுள்ளனர்.

Sharing is caring!