லொக்டவுன் காலத்தில் வீட்டிலிருந்து பணிபுரிபவர்களுக்கு இணையத்தொழில்நுட்பத்திற்கு அவசியமான சில டிப்ஸ்

உலகின் பல நாடுகளிலும் தற்போது லொக்டவுன் முறை பின்பற்றப்பட்டுவருவதனால் அனேகமான அரசாங்க நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் தமது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணியாற்றுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.

இவ்வாறு பணிபுரிவதற்கு கணினிகள் மற்றும் இணையத்தொழில்நுட்பம் என்பன பெரிதும் உதவியாக இருக்கின்றது.

இப்படியிருக்கையில் இந்திய அரசு வீட்டிலிருந்து பணியாற்றுபவர்களுக்காக சில டிப்ஸ்களை வழங்கியுள்ளது.

இவை அனைத்து நாட்டிலுள்ளவர்களுக்கும் பயனுள்ளதாக காணப்படுகின்றது.

குறித்த டிப்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

  • பயன்படுத்தும் சாதனங்கள் மற்றும் ஒன்லைன் கணக்குகள் என்பவற்றிற்கு ஏற்கணவே பயன்படுத்தி வந்த சாதாரண கடவுச் சொற்களை மாற்றி வலிமையான கடவுச் சொற்களை இடுதல்.
  • தனிப்பட்ட கணினிகள், லேப்டொப்களை பயன்படுத்துவதை தவிர்த்து நிறுவனத்தினால் வழங்கப்பட்ட சாதனங்களைப் பயன்படுத்துதல்.
  • பணியாற்றுவதற்கு பயன்படுத்தும் சாதனங்களை பொழுதுபோக்கு அம்சங்களிற்கு பயன்படுத்துவதை தவிர்த்தல்.
  • பணியாளர்களுக்கு இடையில் கலந்துரையாடுவதற்கு (Conference) வழங்கப்பட்ட இணைப்புக்களை சமூக வலைத்தளங்கள் போன்று பொது வெளியில் பகிர்வதை தவிர்த்தல்.
  • கூட்டுப் பணிகள் மற்றும் வீடியோ கான்பரன்ஸிங் என்பவற்றிற்கு நம்பிக்கையான அப்பிளிக்கேஷன்களை பயன்படுத்தி பணியாற்றுதல்.
  • பணிச்செயல் முறைமை (OS), ஆன்டி வைரஸ் மற்றும் அப்பிளிக்கேஷன் மென்பொருட்களை தொடர்ந்து இவற்றைப்படுத்துதல் (Update).
  • தேவையற்ற நேரங்களில் தொலை அணுகல் (Remote Access) வசதியை முடக்கி வைத்திருத்தல்.
  • அலுவலக கோப்புக்களை கையாள்வதற்கு பாதுகாப்பான இணைய இணைப்பினை பயன்படுத்துதல்.
  • Phishing முறையிலான தகவல் திருட்டு மின்னஞ்சல்கள் மூலமாக இடம்பெறுவது தொடர்பாக அவதானமாக இருத்தல்.
  • இலவச மற்றும் திறந்த Wi-Fi இணைப்புக்களை பயன்படுத்துதலை தவிர்ப்பதுடன் வீட்டில் பயன்படுத்தப்படும் Wi-Fi இணைப்பில் ஏற்கணவே தரப்பட்டுள்ள கடவுச் சொல்லை மாற்றியமைத்தல்.

இவ்வாறான பாதுகாப்பு டிப்ஸ்களை வீட்டிலிருந்து பணியாற்றுபவர்களுக்கு இந்திய அரசு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!